Author Topic: அன்றும் இன்றும் !!!  (Read 423 times)

Offline இணையத்தமிழன்

அன்றும் இன்றும் !!!
« on: January 12, 2017, 08:50:39 PM »




அழகிய பூஞ்சோலையில் இயற்கை எழில் சூழ
ஆற்றங்கரையிலே சிறுவர்கள் விளையாட
பசிபோக்க பழம்முண்டு பகலெல்லாம்  விளையாடி
கள்ளமில்லா சிரிப்பும் பொய்  இல்லா நட்பும்
பறவைகள் போலதுள்ளிவிளையாடும்
குழந்தைப்பருவம்

சோர்வுநீங்க   சோறுண்டு 
களைப்பை போக்க கதைக்கேட்டு
இளைப்பாற நிலவொளியில்
கண்ணயர்ந்தோம் அன்று

இன்றோ கைபேசியில் கதைபேசி
கணிப்பொறியில் விளையாடி
உண்ணும் உணவிருந்தும் உண்ணாமல்
உண்ணும் உணவிலும் விஷமேற்றி
உறங்க இடமிருந்து உறங்காமல்
வாழ்வை தொலைத்து அலைகிறோம்
                                               -இணையத்தமிழன்
                                                  ( மணிகண்டன் )   

« Last Edit: January 12, 2017, 09:17:31 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ChuMMa

Re: அன்றும் இன்றும் !!!
« Reply #1 on: January 12, 2017, 09:06:54 PM »
ஆம் தோழா
கைபேசியின் மடியில் இன்று
நம் வாழ்க்கையின் பிடி

யதார்த்தத்தில் தொலைத்தவற்றை மறந்து
புதிதாய் தேடுகிறோம் எதையோ
கூகிளில் ...

கிடைக்காத வரம் இயற்கை
வெளியில் இருக்க ..வீட்டின் இருட்டில்
தடவி கொண்டிருக்கிறோம் கைபேசியை !



அருமையான பதிவு

வாழ்த்துக்கள் தோழா
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline இணையத்தமிழன்

Re: அன்றும் இன்றும் !!!
« Reply #2 on: January 13, 2017, 10:59:01 AM »
படித்தமைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழா

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அன்றும் இன்றும் !!!
« Reply #3 on: January 13, 2017, 12:51:20 PM »

அன்பு சகோதரனுக்கு வணக்கம் .....

     மிக அழகான கவிதை!!!!
  இப்பொது உள்ள இளைஞர்கள் (என்னையும் சேர்த்துதான் )
 இழந்த அன்றைய பொக்கிஷங்களை
    அழகான கவிதையாகப் படைத்துள்ளீர் ....

அண்ணனின் கவிப்பயணம் மென்மேலும்
 சிறப்பாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!


~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்

Re: அன்றும் இன்றும் !!!
« Reply #4 on: January 13, 2017, 02:23:17 PM »
மிக்க நன்றி  மா ரித்தி தங்கம் ஆமா டாமா இப்போல  நாம விளையாடுறதுனா கைபேசிலயும்  மடிக்கணினிலயும் தான் மா விளையாடுறோம்  அப்போல  விளையாட்டுனா வெளிய போய் நண்பர்களோட விளையாடுவோம் ஆனா இப்போ எல்லாம் மாறிபோய்டுச்சி மா

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….