Author Topic: இதயம் மறுப்பதும் ஏன் ?  (Read 386 times)

Offline thamilan

இதயம் மறுப்பதும் ஏன் ?
« on: November 29, 2016, 10:55:56 AM »
ஈடற்ற நிம்மதியும்
இதயம் நிறைந்த குதூகலமுமாய்
இனித்துக் கிடந்த - என்
பிஞ்சுப் பருவத்தை தாண்டிவர- அன்று
எனக்குள் எந்த எதிர்ப்பும் எழவில்லை

இன்றோ........
விஷக்கொடுக்காய் குத்திக் கிழிக்கும்
ஏமாற்றங்களும்
பொறுக்க மாட்டாத
தவிப்புகளும்
புரையோடிய  நினைவுகளும்
சுட்டு சுட்டு
சுகம் காணும் உணர்வுகளும்
ஆழத்தில் புதைந்துவிட்ட
அமைதியுமாய் ........

நான் கிழிந்து
குரலுடைந்து
விடியல் வரமாட்டாத ஏதோ ஒன்றுக்காய்
நிரந்தரமாய் விக்கித் தவித்தாலும் .........

இந்த வாலிபத்தை தாண்ட மட்டும்
என் இதயம்
மறுப்பது ஏன்......?


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இதயம் மறுப்பதும் ஏன் ?
« Reply #1 on: November 29, 2016, 12:20:59 PM »
கட்டுச்சோறென கிடடத்தட்ட
வாழ்க்கைப்பயணம் முழுதும்
வரக்கூடிய பருவகால நினைவுகள்
கொண்டமையால் கூட இருக்கலாம் !!

வாழ்த்துக்கள் !!