வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை
முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையென்றால்
வாழ விட்டு வாழுங்கள்
அது போதும்
உள்ளே உள்ளது தான்
உலகம் - அதை
உணர்ந்துகொண்டால் கோடி இன்பம்
பிறப்புக்கு ஒரு வழி
இறப்புக்கு பல வழி
இடைப்பட்ட வாழ்வில்
பிழைப்புக்கு...?
அது நேர்வழி என்று
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்நாளும் காப்போம்