என் கவிதையை ரசித்து விவாதித்து வாழ்த்துக் கூறிய என் அன்பு தோழமை குரு, லலிதா, இனியா, அனோத் அனைவருக்கும் நன்றிகள் பல... மகிழ்ச்சி அடைகிறேன்.
கம்பன்கழகத்தில் மாட்டிக்கொண்ட கவிதையை போலவே அலசி விவாதித்துள்ளீர்கள்... உங்கள் வாழ்த்துக்களில் ஒரு உத்வேகம் வந்துள்ளது எனக்கு. நன்றி என் தோழமைகளே.
கவிதையுடன் இதயத்தின் அதிர்வும், மௌனமும் இணைந்தே பிறக்கிறது. பிற உலகக் காட்சிகளையும் மனம் உருவாக்கிக்கொண்ட காட்சிகளையும் கவிதையில் இரசிக்கிறோம். இக்கவிதையில் என் அகத்தில் நான் என்ற நுண்ணிய உணர்வின் மௌன பேச்சையே கவிதையாக்கி இருந்தேன். நல்லது... மகிழ்ச்சி....