Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது..., (Read 540 times)
PraBa
Sr. Member
Posts: 373
Total likes: 388
Total likes: 388
Karma: +0/-0
வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,
«
on:
October 23, 2016, 02:48:03 PM »
நலம் தானே அண்ணாவென்று
நகம் கொறித்தபடியே
கேட்டுச்சிரிக்கும் இவனை
இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்
நான் ...
இரட்டைப்புருவத்தை
ஒற்றைப்புருவமாக்கிச்சிந்திக்கிறேன்
விரிகிறது
புருவமும் உருவமும்
கணீரென காதில் ஒலிக்கிறது
பிசிறாத அவன் குரல்...
நாளைய குலுக்கல்
நாற்பது லட்சம்
முதல் பரிசு ....
ஞாபகம் வளர்கிறது
சிக்கிம்
சிம்லா
மிசோராம்
மணிப்பூர் என்று
பட்டியலிட்டு விற்றிருக்கிறான்
பட்டினியாய் கூட விற்றிருக்கிறான்
ஒட்டிய வயிறு பிரிக்க...
உழைப்பை மூட்டை கட்டிவிட்ட பலர்
உழைக்கும் அவனிடத்தில்
சீட்டு வாங்கியதுண்டு
சில்லறை தேவைக்காகவும்
சிலர் சீட்டு வாங்கியதுண்டு
இரட்டை எண் கடைசி என்பான்
நிச்சயம் பரிசு என்பான்
ஆய்வு முடியும் முன்பே
நிச்சயம் பரிசென்றால்
நீயே வைத்துக்கொள்ளென
பரிகசித்த பலரிடத்தில்
உழைப்பே போதுமென்று
உரக்கச்சொல்லிவிட்டு
மௌனமாய் விரைந்து போவான்.
ஞாபகம் விரைகிறது...
பிறர் குடி கெடுக்கும்
பிழைப்புனக்கு தேவை தானோவெனும்
என் கேள்விக்கு
புன்னகை தவிர
ஒரு பதிலும் பதியாமல்
சீட்டைத்திணித்து
காசைச்சரிபார்த்து
கடந்து போயிருக்கிறான்...
விற்ற சீட்டுக்கு
விழுந்த பரிசுக்கு
பெருமிதம் காட்டியதுண்டு
பொறாமை காட்டியத்தில்லை...
அடுத்த குலுக்கலுக்கான சீட்டை
அலட்சியமாய் விற்கத்துணிவான்
அன்றொருநாள்
வெறுங்கை வீசி
வெறும் வயிறாய் வந்தவனிடத்தில்
ஞாபகப்படுத்திய ஞாபகம்
தடை செய்த அரசின் அக்கறை சுட்டி .
பிறர் குடி கெடுக்கும்
பிழைப்பினி கிடையாது உனக்கென்று...
ஊழலும் இலஞ்சமும்
தடை செய்தாகி விட்டதாவென்று
உமிழாமல் உமிழ்ந்து விட்டு சென்றவன்
இவனே தான்
ஞாபகம் கலைகிறது...
நலம்தானே அண்ணாவென்று
வினவியவன்
பதில் கேளாமலே
நகர்கிறான்
அவசரம் கூட்டி...
அடுத்த கடையின் புட்டி சேகரிக்க....
அவன்
மீண்டும் வருவதற்குள்
மீத மதுவையும் குடித்துவிட்டு
அவனுக்கே தந்து விடலாம்
இந்த புட்டியை நான் ....
அதிகம் பேசக்கூடாது
நகர்�ந்து விடவேண்டும்
நான் ....
எதையேனும் இப்போது
அவன் கேட்டுத்தொலைத்தால்
பதிலில்லை
என்னிடமோ உங்களிடமோ....!
Logged
(5 people liked this)
(5 people liked this)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
Re: ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,
«
Reply #1 on:
October 23, 2016, 06:58:36 PM »
கவிதையில் நயம் கண்டேன்
சுவையோடு பொருளும் கண்டேன்
ரசித்தேன் வியந்தேன்
விழித்தேன் அவன் செயல்கண்டு .,,,,,
அழகான கவிதை பிரபா. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
Logged
(4 people liked this)
(4 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,
«
Reply #2 on:
October 24, 2016, 09:20:28 AM »
வணக்கம் தோழர் பிரபா .....
அழகானப் படைப்பு ....
கவிதையின் பொருள் சிறப்பு ....
அழகியப் படைப்பை வழங்கியதற்கு நன்றி ....
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! இனிதே தொடரட்டும் கவிப்பயணம் !! ~
~ !! ரித்திகா !! ~
Logged
(3 people liked this)
(3 people liked this)
AnoTH
FTC Team
Sr. Member
Posts: 323
Total likes: 1595
Total likes: 1595
Karma: +0/-0
Gender:
சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,
«
Reply #3 on:
October 24, 2016, 09:55:00 AM »
கவிதையின் முக்கிய அங்கம்
வாசிக்கும் வாசகர்களையே கேள்வி
கேட்கவும் சிந்திக்கவும் வைத்துவிடும்
இரசனை உணர்வில் அதன் தன்மை
அங்கம் வகிக்குறது. ஆளமான வரிகள்.
வாழ்த்துக்கள் சகோதரன் .
தொடரட்டும் உங்கள் சிந்தனைத்துளிகள்.
ஒரு நாள் முழு மழையாக அது நூலக
அமைய வாழ்த்துகிறேன்.
Logged
(2 people liked this)
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
ஞாபகம் வளர்கிறது....,ஞாபகம் விரைகிறது...,