« on: October 22, 2016, 10:39:38 PM »
கார ரவை காளான் கேக்
ரவை கேக்குக்கு…
வெண்ணெய் – 20 கிராம்,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 4 பல்,
ஒரிகானோ, பேசில் இலைகள் – 1/4 டீஸ்பூன் (இதற்கு பதில் நறுக்கிய துளசியை உபயோகிக்கலாம்),
ரவை – 1 கப்,
தண்ணீர் – 2 1/2 கப்,
உப்பு, மிளகு – தேவைக்கு,
துருவிய சீஸ் – 50 கிராம்,
எண்ணெய் -50 மி.லி.
காளானிற்கு…
காளான் – 1 பாக்கெட்,
வெண்ணெய் – 20 கிராம்,
நறுக்கிய வெங்காயம் – 1,
கொத்தமல்லித்தழை – சிறிது,
நசுக்கிய பூண்டு – 3 பல்,
ஃப்ரெஷ் கிரீம் – 1/4 கப்,
மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பால் – 1 கப், ஒரிகானோ,
பேசில் இலை – சிறிது (இல்லையெனில் துளசி இலை),
உப்பு, மிளகு, கரகரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கேக்கிற்கு…
வெண்ணெயை சூடாக்கி வெங்காயம், பூண்டு நிறம் மாறாமல் வதக்கவும். ஒரிகானோ, பேசில், உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உப்புமாவுக்கு ரவை சேர்ப்பது போல் ரவையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். வேகவைத்த ரவை கலவையை சதுரங்களாக வெட்டி தோசைக்கல்லில் பொன்னிறமாக முறுகலாக எண்ணெய் விட்டு வறுத்தெடுக்கவும்.
காளானிற்கு…
வெண்ணெயை சூடாக்கி வெங்காயம், பூண்டு, காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். பாலும், கிரீமும் சேர்த்து இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் உப்பு, மிளகு, மிளகாய் தூள், ஒரிகானோ, பேசில் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்கவும். ரவை கேக்கின் மேல் காளான் கலவை 1 டீஸ்பூன் வைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
« Last Edit: October 22, 2016, 10:44:52 PM by MysteRy »

Logged