Author Topic: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2016  (Read 1317 times)

Offline Forum

எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது.ஆக்கமும்,கருத்துக்களும் நிறைந்த உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கவிதைகள் தீபாவளி திருநாள் பற்றிய  சொந்த கவிதைகளாக அமைந்திட வேண்டும்.
இந்த பகுதியில் முன்பதிவு செய்தல் கூடாது.


அதிகமான கவிதை பதிவுகள் வரும்பட்சத்தில்  குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும்  இங்கு குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பதிவுகள் அனுமதி மூடப்படும் . எனவே தங்கள் கவிதைகளை  விரைவில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கவிதைகளை எதிர்வரும் 24 ஆம் தேதி   (திங்கள் கிழமை) இந்திய நேரம் இரவு 12:00 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தீபாவளி திருநாளில் உங்கள் கவிதைகள் நண்பர்கள் இணையதள வானொலி வழியே ஒலிக்கட்டும். தீபாவளி திருநாளில் உள்ளம் மகிழட்டும். 


Offline AnoTH


மகிழ்ச்சியான இந்நாளில்
ஆட்டம் , பாட்டம் ,
கொண்டாட்டம்.

இவைகளுக்கு
மத்தியில் எங்கேயோ
கேட்கும் குரலின்
உணர்வை நாமும் உணரலாம்
வாருங்கள் தோழர்களே !


என்ன சத்தம் ?
என்றுமில்லாக் கொண்டாட்டம் ?
கோவில் மணியோசை கேட்க.
சிறுவர்களின் ஓட்டமும் நிலத்தை அதிரவைக்க
பட்டாசுக்கள் வானுயர்ந்து செல்ல

சகோதரர்கள்  வீதி வீதியாய்
துவிச்சக்கர வண்டியில்
சாகசம் காட்டிட,
சகோதரிகள் வீடு வீடாக
இனிப்பு அளித்து இன்பம் கொள்ள.
தாத்தாக்களும் பாட்டிமாரும்
ஆசீர்வதித்திட,

இப்படி எங்கும் மகிழ்ச்சி.

இன்று.........

திரையரங்குகள் திணறிப்போகும்...
பறவைகள் பதறி ஓடும்...
புத்தாடைகள் புதுமை செய்யும்...
கடல் அலையைக்காண கூட்டம்
அலை மோதும்.

இவ்வாறு எங்கும் உற்சாகமிக்க
சமூகத்தின் மகிழ்ச்சியை
இன்று என்னால் உணர்ந்திட முடிகிறது.

இந்த தருணத்தில்  என் மனதோ.....
ஏங்குகிறது மாற்றத்தை விரும்ப,
தவிக்கிறது  வாய்விட்டு சிரிக்க,
ஆனால் என் நிழலின்
மடி சாய்ந்து ஆதரவற்று நிற்கின்றேன்
சூழ்நிலையில் சிக்கிய அநாதை என்பதால்.

நான் வேண்டிக்கொள்வது
இவைகள் தான்
கதிரவன் ஓய்ந்து விடாதீர்கள்
பறவைகள் அச்சம் கொள்ளாதீர்கள்
அனைவரும் இவ்வாறே உறைந்துவிடுங்கள்.

இந்த நொடியை இரசித்திட
அன்னை, தந்தை , பிள்ளைகள்
இவ்வாறு அழகிய காட்சியை
கண்டிட.
புத்தாடைகள் வாசனை
இனிப்பின் சுவை
இவைகளை உணர்ந்திட
எனக்கும் இந்த நாளை
பார்த்துக்கொண்டிருக்கும்
வாய்ப்பை எண்ணி
வேண்டிக்கொள்கிறேன்


நன்றி   
                       
என் நாளை புதுமை ஆக்கிய
தீபாவளி திருநாளுக்கு.


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
« Last Edit: October 21, 2016, 02:22:41 PM by AnoTH »

Offline இணையத்தமிழன்

commercial photography locations

அதிகாலையிலே நான் எந்திரித்த
வேளையிலே !
சாலையிலே முழுக்க
வேட்டுச்சத்தம் கேட்கையிலே

வெளியே பார்த்தால்
பெருசுமுதல் சிறுசு வரை
ஆனந்தத்தில் திளைத்துக்கிடக்க
வீடுதோறும் வண்ண வண்ண
கோலங்கள் கண்ணைப்பறிக்க 
ஊரே விழாக்கோலம் பூண

இன்றுஒருநாளாவது குளிடா
மகனே என்று கையில் என்னை
கோப்பையுடன் வந்தால் தாய்
தங்கைகளோ ஆனந்தத்தில் தத்தளிக்க
தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து இருக்க
நானோ குளித்து முடித்தேன்

கறிசோறில் வீடே மணக்க
என் உள்ளம் திளைக்க
தங்கைகளுடன் நானோ வேட்டுவெடிக்க
இரவும் வந்தது நிலவையும்
நானம்கொள்ளவைக்கும் வகையில்
வானமே வண்ணமயம் ஆனது

ஊரே சாலையில் சந்தோசமாய்
ஆர்ப்பரிக்க தந்தையும் தாயும்
வேடிக்கை பார்க்க பிள்ளைகளோ
பட்டாசு கொளுத்த

என் தந்தையும் இன்று வீடு
வந்து சேர்ந்தார் காசாக
(வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை )
                        - இணைய தமிழன்
                          ( மணிகண்டன் )
« Last Edit: October 29, 2016, 09:50:12 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline RubeshV

அதிகாலை துயில் எழுந்து
அருமை தம்பியும் நானும்
போட்டி போட்டுக்கொண்டு
போடா நீ ...நான் தான் முதல் என சொல்லிக்கொண்டு

சரவெடி யொன்றினை வீட்டின் வாசலில்
சரம் போல் வைத்து  அவ் வெடி சத்தத்தில்

தெருவில் உள்ள நண்பர்களின் துயிலினை
தெளிய வைத்து...

வீட்டிற்குள் வீறு நடை போட்டு வந்தால்

அப்பாவின் அன்பான
அதட்டலில்

அக்காவும் அண்ணனும்
அன்புத்தம்பியும் அறிவான தங்கையும்
 
வரிசையாக  அமர்ந்துகொண்டு
வாஞ்சையுடன் அப்பாவின்

எண்ணெய் தேய்த்தலை
எள்ளி நகையாடிக்கொண்டே
ஏற்றுக்கொண்டு

காசாண்டாவினில்
காய்ந்து கொண்டும்
கொதித்து கொண்டிருக்கும்
கொதி நீரினை

தேவைக்கும் அதிகமாகவே
வாளியினில்
ஊற்றி ...கொதி நீரினை பதமாக விழாவி  விட்டு
ஊற்றினார்  அவரவர் உடம்பினில்அன்பு அன்னை....

கும்மாளத்துடன்
குளியலை முடித்துக்கொண்டு
குதூகலத்துடன்
ஆடை அணிகலன்களை
ஆரவாரத்துடன் அணிந்துகொண்டு.....

தாத்தா பாட்டி
அப்பா அம்மா
சித்தி சித்தப்பா
பெரியம்மா பெரியப்பா வின்
ஆசிகளை அன்புடனும்
ஆசையுடனும் பெற்றுக்கொண்டு....

கறிச்சாப்பாட்டினை
களிப்புடன் சாப்பிட்டு
வெளியில் ஓடினோம் ...மீண்டும்
வெடி வெடிக்க .....

வெடி சத்தத்தில்
வெடவெடத்து
நடுங்கி கொண்டே இருந்தது
நாய் குட்டியொன்று ...

அருமை அக்காவும்
அறிவான தங்கையும்
பல் சுவை பலகாரங்களை
பாத்திரத்தில் ஏந்தி
பக்கத்துக்கு வீட்டிற்கு
பகிர்ந்தளித்து வந்தனர்
பாந்தத்துடன்....

நட்பு வட்டாரத்துடன் தெருவினில்
நடை பயின்று
நண்பர்களின் புத்தாடைகளை
பரிகாசம் செய்து கொண்டு
வெடிகளை பல நண்பர்களுடன் பகிர்ந்து
வெடித்துக்கொண்டு
குதூகலத்துடனும்
கும்மாளத்துடனும்
கொண்டாடினோம்
தீபாவளி திருநாளினை அன்று...

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
கோகுல கண்ணனோ ..
குழலிசையின் மைந்தனோ..
அசுரனை வதம் செய்தவரோ...
வெற்றி நாயகன் கிருஷ்ணரோ..

தீயவனின் விண்ணப்பத்தால்...
தீப ஒளி .. தீபாவளி ..
வெற்றி வாகை சூடி ..
வாழ்த்தினர் பலர்..

சகோதிரி வீட்டுக்கு செல்ல..
எண்ணெய் குளியல்..
இனிப்பு  வழங்கி..
திருநாளை கொண்டாடினர்...

முன்னோர்கள்  காட்டிய..
எண்ணெய் குளியல்..
புத்தாடை அணிந்து ,
பிரார்த்தனை முடித்து ..
இன்பமாய் தொடங்கிற்று

தாத்தா பாட்டி
பெற்றோர்கள்  ஆசிர்வதிக்க..
கூப்பிட்டார் தாத்தா
புன்னைகையும்  பரிசுமாய்....

அப்பா சிறிய
உறையில் பணம் ..
அம்மா செல்லமாய்
ஒரு முத்தம்..

ஒற்றைக்கண்   திறந்தால்..
பட்டாசு , மத்தாப்பு ..
கனவில் மிதந்தேன் ..
சொக்கி  விழுந்தேன்.

நண்பன் தூங்க...
எப்போது வந்தாய்
கேட்டன கண்கள்..
இப்போதுதான்  தோழா ..

மழைச்சாரலில்  பயணம்..
தோழர் தோழியர்
வீட்டிக்கு சென்றோம்..
பலவிதமான இனிப்பு,
முறுக்கு அதிரசம்..

பரிசுகளும் பட்டாசுமாய்
பெரியப்பா வந்தார்...
கண்முன்னே மிதக்க.
மின்னிற்று கண்ணில்...

என் எண்ணமோ
பட்டாசு மத்தாப்பு ..
தேடினேன் தேடினேன்
எங்கும்  காணோம் ..

பகல் இரவாய்
மாற சில நிமிடங்கள்...
வந்தது இரவு..
மகிழ்ந்தது மனம்..

பட்டாசா மத்தாப்பா..
இரண்டையும் வெடித்தேன்..
இரவின் மேகங்களுக்கு
நடுவே மின்னியது..

பட்டாசும் மத்தாப்பும்..
தீப ஒளி தீபாவளியில்..
சந்தோசமாய் ஆனந்தமாய்..
இன்பமாய் முடிந்தது..

FTC  குடும்பத்தினருக்கு  தீப ஒளி வாழ்த்துக்கள்...
« Last Edit: October 28, 2016, 10:39:17 PM by BlazinG BeautY »

Offline DaffoDillieS

விடியற்காலை வேட்டுச் சத்தங்கள்..
என்னைத் தட்டியெழுப்ப ..
அவசர அவசரமாய்ப்
போட்ட எண்ணைக் குளியலில் நான் பளபளக்க.
அம்மா செய்த பலகாரங்கள்
கம கமக்க..

சிறார்களுடன் சிறுபிள்ளையாய்...
நான் வேட்டு வெடிக்க ..
உற்சாகம் பொங்கி வழிய நான் வீட்டை வலம் வர..
தோழிகள் புடை சூழ என் புத்தாடையைக் கண்டு சொக்க..
உறவினர்கள் வருகையில் இல்லமே குதூகளிக்க..
இனிப்புகளும் திண்பண்டங்களும் என் சித்தத்தைக் கவர..
வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும்
சிறப்பு நகழ்ச்சிகள் அல்லோலகல்லோலப் பட..

என் மனதிற்கினிய மாலை நேரமும் வர..
தீப ஒளி அஸ்த்தமித்த சூரியனை நினைவூட்ட..
சடசட வெனப் பொறியும் மத்தாப்பு
கோடி நட்சத்திரங்களைக் கண் முன் காட்ட..
படேல் படேல் எனத் தெறிக்கும் வெடிகள்
காதுகளைச் செவிடாக்க..
புஸ்ஸ் என சீரிப்பாயும் புஸ்வானங்கள்
இரவைப்பகலாக்க..
என் ராக்கெட்டுகள் வின்னைத் தொடுவதற்குள்
எதிர் வீட்டுச் சாளரத்தைத் தொட..
இம்முறையும் தீபாவளி இமைக்கும் நேரத்தில் கடந்து விட்டதே என நெஞ்சம்
அடுத்த தீபாவளியை எதிர்நோக்கியிருக்கும்..!!!!.

இருளில் ஆழ்ந்த பூமிக்கு ஞாயிறு விடியலழிப்பது போல..
வாழ்வின் சோகங்களையும் இயலாமைகளையும் தீப ஒளியில் எரித்து..
தீய நரகாசுரன் தீயில் பொசுங்கியது போல..
தீய குணங்களைப் பொசுக்கி..
ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்த்து..
தீபத்திருநாளாம் இன்று..
சாதி மத பாகுபாடுகளை உடைத்தெறிந்து
புதிய மனிதராய் அவதாரம் எடுப்போமே..!!!!

இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க..
அனைவருக்கும் என்..
தித்திக்கும்  தீப ஒளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்!!!!
« Last Edit: October 25, 2016, 08:15:05 AM by DaffoDillieS »

Offline JEE

ஐப்பசியில் தேய்பிறை
சதுர்த்தசி திதியில்
தீபங்களை வரிசை
வரிசையாக வைப்பது  தீபாவளி...........

அஞ்ஞான இருளை அகற்றி
மெஞ்ஞான ஒளியை
பெறுவதே தீபாவளி...........

புராணக்   கூற்றுப்படி
நமது முன்னோர்கள் 
நம்பிக்கைதான் யாது? .......

தீபாவளி நாளன்று
லக்ஷ்மி நம்மவர்
இல்லத்திற்கு வருவதே தீபாவளி...........

ஆதிசக்தியின்
அம்சமான மகாலஷ்மி
ஆசி வழங்கி தேவர்களுக்காக
அவதாரம் செய்த நாளே தீபாவளி .............

உறவுகளை பலப்படுத்தி
உறவுகள் மகிழ்வதும் தீபாவளி .............

நமது தேசத்தைக் காக்கும்  ராணுவ
நமது வீரர்களுக்கு தீபாவளி
வாழ்த்துச் சொல்வதும்
வீரர்களை நினைக்கவும்
செய்த நாளே தீபாவளி .............

இனிப்போ காரமோ சேர்ந்து
கூடியாடி செய்யுங்கோ.........

கையால் வடை சுடுங்கோ
கடையில் வடை வேனாமுங்கோ......

காலால் நடந்து போங்கோ.
காலையில் நடப்பது நல்லதுங்கோ.....

முதியவர்கள் வாழ்வில் 
தீப ஒளியை ஏற்ற வாரீர்........

ஆதரவற்றோர்  வாழ்வில்
தீப ஒளியை ஏற்ற வாரீர்........

மக்கள் மனதில்
தீப ஒளியை ஏற்ற வாரீர்........

மக்களை மகிழ்விக்க
தியாகஒளியை  ஏற்ற  வாரீர்.......

என் இனிய அன்பு நெஞ்சங்கட்கு
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.............

வாழ்க வளமுடன்.............
« Last Edit: October 24, 2016, 08:52:48 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
பச்சரிசி  பதமா ஊறவைச்சி
இடிச்சி சலிச்சி எடுத்துவச்சி 
சர்க்கரை பாகுவச்சி
பலகாரம் சுட்டகாலம் 
மலையேறி போயாச்சு ...

அத்த மக்கா  மாமா மக்கானு
ஒரே மல்லு துணி எடுத்து
ஆளுக்கு ஒரு சோடி
தச்சு போட்ட காலம் 
மலையேறி போயாச்சு ....

ஒத்தால் ஓரகத்தி ஒண்ணாசேர்ந்து
நோன்பெடுத்து படையல் போட்டு
எல்லார்க்கும் பந்திவச்ச காலம்   
மலையேறி போயாச்சு ....

சீயான்  கொடுத்த அஞ்சுக்கே
இரு கை (இருக்கை )கொள்ளாத வெடிவாங்கி
இளவட்டங்கள் வெடிச்ச காலம்
மலையேறி போயாச்சு ..
.
பொறிக்க ,அரைக்க வகையா
இயந்திரம் இருந்தும் அடியெடுத்து
வைக்க அலுப்பா இருக்குனு இப்போ
தொலைக்காட்சியில் மூழ்கிபோயாச்சு ..

அண்டையில யார் இருக்கா
தெரியாது  யாரென்றே
பலகாரம் பலசெய்து
யாருக்கு நான்கொடுக்க...
என்ற நினைப்பு இப்போ வந்தாச்சு ..

பலகார கடையில
தலைக்கு ஒண்ணுனு
கணக்கு  போட்டு வாங்கி வந்து   
சாமிக்கு படைச்சிட்டு
வீட்டுஆசாமி சாப்பிடவா  தீபாவளி  ..

கொசுவலய பிரிச்சு தச்சு
நித்தம் ஒரு பேரு வச்சி
விலையை கொஞ்சம் ஏத்திவச்சி
தலைவன் நெஞ்சடைச்சி போகவா தீபாவளி...

மதம் சாராமல் மகிழ்ச்சிக்குனு
சொல்லியே ஓசோனின் ஓட்டையை
தன்  பங்கிற்காக பெருசாக்கவோ
இந்த தீபாவளி ...

பொழுது போக்க  நாலுபடம் வந்துருக்கு
தலைவன் படம் அதிலொன்னு
சாமிக்கும் பிள்ளைக்கும் வாங்காத பாலை
கட்டவுட்டுக்கு ஊத்த அணிவகுத்து
நிற்கும் அம்மாஞ்சியை பார்க்கவோ இந்த தீபாவளி ....

இந்த வெட்டி செலவை காண்கையிலே
மன்னித்தே விட்டுருக்கலாம்
கடவுள் நரகாசூரனை என்று
முனகும் மூத்ததலைமுறை .....
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....