ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை
நல்லதை நாம் அறிய
தீமை என்று ஒன்றிருக்க வேண்டும்
துன்பம் என்று ஒன்றில்லாவிட்டால்
இன்பத்தை நாம் எப்படி உணர்வது
இன்பத்தின் சுவை
துன்பத்தால் அறியப்படுகிறது
வெளிச்சத்தின் ஒளி
இருளால் அறியப்படுகிறது
எதிரும் புதிரும்
ஒன்றானதே உலகம்
இரவும் பகலும் ஒன்றினையும் போது
நாள் பிறக்கிறத்து
எதிரும் நேரும் ஒன்றினையும் போது
மின்சாரம் பிறக்கிறது
கருப்பும் வெள்ளையும் ஒன்றினையும் போது
ஓவியம் பிறக்கிறது
ஆணும் பெண்ணும் ஒன்றினையும் போது
குடும்பம் பிறக்கிறது
தொடக்கம் என்று ஒன்றிருந்தால் தான்
முடிவு என்று ஒன்றிருக்கும்
பிறப்பு என்று ஒன்றிருந்தால் தான்
இறப்பு என்று ஒன்றிருக்கும்
விழிப்புக்கு சக்தியை ஊட்டத்தான்
உறக்கம் வருகிறது
வாழ்க்கைக்கு ஆர்வம் ஊட்டத்தான்
மரணம்
வாலிபத்தை அனுபவிக்கத்தான்
வயோதிபம்
நிழலின் அருமை தெரியத்தான்
வெயில்
பிறப்பின் மேன்மை அறியத்தான்
இறப்பு
உடலின் ஆரோக்கியத்தை உணர்த்தத்தான்
நோய்
விடுதலையின் ஆனந்தத்தை உணர்த்துவது
அடிமைத்தனம்
பரத்தை தான்
பத்தினியின் மேன்மையை உணர்த்துகிறாள்
முட்டாள் தான்
அறிஞனின் உயர்வுக்கு காரணம்
இருள் தான்
நட்சத்திரங்களை பிரகாசிக்க செய்கின்றன
நரகம் தான்
சொர்கத்தின் மேன்மையை அர்த்தப்படுத்துகிறது
முரண்களால் ஆனதே உலகம்
ஒன்றில்லாவிட்டால்
மற்றது இல்லை