Author Topic: புத்தகம் (சுவைத்துப் படிக்க)  (Read 873 times)

Offline SweeTie

பல்சுவை  பல பக்கங்கள்
பிறப்பு  முகவுரை
பெற்றோர்கள்  அணிந்துரை
வாழும் நாட்கள் பக்கங்கள்
பருவங்கள்  அத்தியாயம்

அறியாத  பருவம்  புரியாத வயசு
குழந்தை  மனசு  மழலைப் பேச்சு
தாயின் அணைப்பு தந்தையின் பரிவு
ஆசான் அறிவுரை  புத்தகங்கள் சுமை

ஆசைகளை தூண்டும இளமை பருவம்
அரும்பு மீசை குறும்பு பார்வை
கைத்தொலை பேசியும் கல்லூரி வாழ்க்கையும்
போட்டா போட்டியும்  நண்பர்கள் அரட்டையும் .

காதலை  தேடும்   வாலிப பருவம் 
நங்கைகள் எல்லாம் அழகாய் தெரிவர் 
தேவதைகளின் தரிசனம்  கிடைக்க 
மன்மதபாணம்  மலர்மிசையேகும்

குடும்பம் கோவிலாய்த் தெரியும் பருவம்
வரவுக்கு மீறிய செலவுகள் சுமக்க
திரை கடலோடித் திரவியம் தேடி
நாயாய் பேயாய் அலையும்நாற்பதாம் அகவை .

ஐம்பது கடக்கும் மீசையும் நரைக்கும்
பணத்தின் பெருக்கம் தலையும் கனக்கும்
வாழ்க்கையில் சொகுசு வண்டியில் சொகுசு
உயர் ரக மதுவகை  உண்டியில் சிறப்பு


வாழ்க்கையை முழுதாய் ரசிக்கும் பருவம்
காதலைத் திரும்ப அசைபோடும் வயது
துணையின்  தேவையைப் புரியும் பருவம்
காமம் இல்லாத காதலைக் களிக்க
அறுபதாம்  அகவையும் அண்மையானதோ

இனிப்பு எதிரி காரம் பகைவன் உப்பு விரோதி
மதுப்  போத்தல்களுக்கும் நிரந்தர விடுதலை i
அடிக்கடி மருத்தவ பரிசோதனையும்  மாத்திரைகளும்
விரைந்தது நானல்ல  எழுபது அகவை.

தனிமை தொலைக்க நண்பர்கள்  கூட்டம்   
சீரில்லா காலநிலை  சீர்கெட்ட  சமுதாயம் என
பலதும் பத்தும் பழையன  பேசவும்
பற்றுக்கள் அறுத்து சித்தாந்தம் பேசவும்.

பற்கள் விழுந்து சொற்கள்  புரண்டு
தலையது  நரைத்து  வெண் பஞ்சாகி
நடை தளர்ந்து கண்களும் மங்கி
நாட்களை என்னும் காலமும் வந்ததோ

கடைசிப் பக்கம் எழுதும் உரிமை
நம்மிடம் இல்லை
முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை.........
« Last Edit: October 02, 2016, 08:47:25 PM by SweeTie »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: புத்தகம்
« Reply #1 on: October 02, 2016, 01:13:06 PM »

வணக்கம் செல்லம் ....
வாழ்க்கையின் அத்தியங்களை அழகாக
கூறியுள்ளீர் .....
தங்கள் புத்தகத்தின் ஒவ்வொரு ஏடுகளையும்
ஒன்றுக்கு மூன்று முறை ரசித்து மெய்மறந்துப் படித்தேன்...

''முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை.........''
காத்திருக்க தானே வேண்டும் ....
எழுதியன் வந்து முற்று புள்ளி வைக்கும் வரையில் .....
மிக அருமை தங்கம் ....
வாழ்த்துக்கள் .....



~ !! ரித்திகா !! ~

Offline LoLiTa

Re: புத்தகம்
« Reply #2 on: October 02, 2016, 04:32:07 PM »
Sweetie sis arumayane kavidhai!!

Offline JoKe GuY

ரொம்ப யதார்த்தமான உண்மைகளை உங்களின் கவிதை பூக்களால் தொடுத்த விதம் மிக அருமை .மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline Karthi

JO sema lines....padikumbothu end epi irrukum nu ninachite padichen  " கடைசிப் பக்கம் எழுதும் உரிமை
நம்மிடம் இல்லை
முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
காத்திருப்போம் அதுவரை........." but end la super :) sweetie nu unga nick ethaar pola storyum sweet ahh irunthuchu ....kalakal ;)

Offline SweeTie

ரித்திகா     லொலிடா   கார்த்தி     நன்றிகள்.    வாழ்க்கையின் யதார்த்தம் இதுவே.

Offline ~DhiYa~

 :P  jo sis semmaya iruku kavithai love  u sis :) :) :)   vaalvin mudivu emmala theermanika mudiyathu woow semma sis     :-[ :-[  commercial photography locations    commercial photography locations

Offline SweeTie

நன்றி  தியா..... வாழ்க்கை புத்தகத்தை  சுவைத்து  படியுங்கள்.

Offline EmiNeM

உங்கள் புத்தகம் என் அகம் புகுந்து வாழ்வியல் குறிப்பெழுதி விட்டு சென்றது. சுவைத்து படித்தது என் நா மட்டும் அல்ல நாளமும் சேர்த்து.

மிக அழகான கவிதை தோழியே ....
சிறப்பு

Offline GuruTN

வாழ்வின் வழிமுறைதனை புத்தகத்தின் நடை கொண்டு உருவகப்படுத்தி மிக இனிமையான கவிதை ஒன்றை எழுதி தமிழுக்கு ஓர் அழகு செய்த என் அன்பு தோழிக்கு இந்த ரசிகனின் அன்பு வாழ்த்துக்கள்... அருமை தோழி... ;) ;) ;)

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
நாற்பத்தி ஆறு வரிகளில்
நறுக்காய் எழுதப்பட்ட
வாழ்க்கை என்னும் புத்தகம் !...
ரசனையோடு மெல்ல
ரசித்து படித்ததில் தெரிகிறது
சுவீட்டியின் கவிதை வித்தகம் !!...
.

Offline SweeTie

எமினெம்   உங்கள் நாளம் மிகவும் புண்யம் செய்திருக்கிறது.  நன்றிகள்.
குரு  வாழ்க்கையை  அனுபவித்து வாழவேண்டும்.  நன்றிகள்
கபிலன் நாற்பத்தாறு  வரிகளை  ரசித்து படித்த உங்கள் பொறுமைக்கு நன்றி.

Offline thamilan

ஸ்வீட்டி
எல்லா பருவத்தையும் பற்றி சொன்ன நீங்க  கடைசியா ஒன்ன மறந்துட்டேங்களே

முகவுரை எழுதியவன் முடிவுரையும் எழுதுவான்
முடிவுரைக்கு அப்புறம் நீங்க பேயா அலையும் பருவத்தை சொல்ல மறந்துட்டேங்களே 

Offline SweeTie

தமிழன்  சொர்க்கத்தில் எது பேய்கள்... :D :D :D..சுவைத்து படித்தமைக்கு  நன்றி.

Offline ZaRa

Very nice poem Sweetie.. :)