உன் முதல் கவிதை எனக்கானதாக அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி எனக்கானவள் கோபப்பட்டு, நான் எழுதுகிறேன் உனக்காக என் முதல் கவிதையை என்று எழுதியது.. இதோ என் பெருமிதம் பொங்க காரணமாணவளின் வரிகள்.
"என்னவனின் வருகை"
நண்பர்கள் இல்லையென்று - தேடினேன்
இந்த உலகத்தின் எல்லை வரை,
என் மடிக்கணினியில்.
அப்போது வந்தாய் என் வாழ்வில்.
எல்லா நண்பர்கள் போலத்தான்
பேசினோம் பழகினோம் - இருந்தாலும்
சூழ்நிலை காரணத்தினால் பிரிந்தோம்.
தேடிப்பிடித்தாய் என்னை மறுபடியும்,
என்னை எனக்கே மீட்டு கொடுத்தாய்.
நண்பர்கள் இல்லை என்று
கவலையில் வாடிய எனக்கு,
உன் தோள்கள் ஆறுதல் கொடுத்தது,
கை கொடுத்து தூக்கிவிட்டாய்,
மீண்டும் நான் உயிர்த்தெழுந்தேன்.
என் வாழ்வில் தோழனாக வந்து
இன்று என்னவனாக மாறினாய்,
இந்த மாற்றம் எப்படி நடந்தது
என்பது இன்றும் நான் அறியாத விந்தை,
அனாலும் காலத்தின் உண்மையை அறிந்துகொண்டேன்.
என் வாழ்வில் நண்பனாக வந்து
என்னவனாய் மாறி என்றும் என்னுடன்
துணை வர போகும் என்
அன்புக்காதலனே, என்றும்
உன் வாழ்வில் இருப்பேன் உன்னவளாக.
-உன்னவளின் பதில்-
-புன்னகை பூக்கும் நான்-