Author Topic: ~ இட்லி உப்புமா ~  (Read 402 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இட்லி உப்புமா ~
« on: September 06, 2016, 03:42:22 PM »
இட்லி உப்புமா



இட்லி – 4
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் 1ஃ4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். சுவையான இட்லி உப்புமா ரெடி.