Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ எண்ணைக் குளியலின் நற்பலன்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ எண்ணைக் குளியலின் நற்பலன்கள் ~ (Read 391 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226706
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ எண்ணைக் குளியலின் நற்பலன்கள் ~
«
on:
August 29, 2016, 09:58:31 PM »
எண்ணைக் குளியலின் நற்பலன்கள்
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
# இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.
# ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.
# தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும்.
# தலைவலி, பல்வலி நீங்கும்.
# தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,
# உடல் பலமாகும்,
# சோம்பல் நீங்கும்,
# நல்ல குரல் வளம் உண்டாகும்.
# சுவையின்மை நீங்கும்.
# இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:
# நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.
# எண்ணெய் தேய்க்கும்பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.
# காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
# எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும்.
# ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.
எண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:
# நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
# அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.
# வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
எண்ணெய்க் குளியலன்று செய்யக்கூடாதவை:
# பகலில் தூங்கக் கூடாது.
# அதிக வெயிலில் அலையக்கூடாது.
# குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
# உடலுறவு கொள்ளக் கூடாது
# நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது
எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!
நன்றி – டாக்டர் விகடன் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா….
‘துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்…’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. ‘தலைவலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகத்தில் எண்ணெய் வடியும்… தலைமுடியை அலசுவதே கஷ்டம்…” என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.
உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.
‘தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.
மாசுக்களால் பாதிப்பு
சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.
‘சனி நீராடிய’ அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில் கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமே கூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.
மனம் லேசாகும்
சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, ‘உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு…’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.
# வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
# வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும்.
# மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும்.
# பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.
# முடி நன்றாக வளரும்.
# முன்னந்தலையில் வழுக்கை விழாது.
# எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும்.
# சரும வறட்சி நீங்கும்.
# உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.
எப்படிக் குளிக்க வேண்டும்
# ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
# அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
# உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
# ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது.
# சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் ‘சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம்.
# வேர்க்குரு இருந்தால் ‘அருகம்புல் தைலம்’, ‘வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம்.
# குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.
யாருக்கெல்லாம் தேவை இல்லை
# காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள்,
# நோய்வாய்ப்பட்டவர்கள்,
# அடிபட்டு உள் காயம்பட்டவர்கள்,
# மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள்,
# நாள்பட்ட நோயாளிகள்,
# புற்றுநோயாளிகள்,
# உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ் செய்யவே கூடாது.
.
வீட்டிலேயே தயாரிக்கலாம்
# 2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துவிடவேண்டும். இந்த எண்ணெயை மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி, தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பயத்த மாவைத் தேய்த்து அலசலாம்.
# விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம்.
# எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
# அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம்.
# உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ எண்ணைக் குளியலின் நற்பலன்கள் ~