தமிழ் எனக்கு தலைக்கவசம்
சுவிச்சக்கரம் ஓட்டும்போதும்
அதை அணிந்திருப்பேன்
தமிழ் எனக்கு மூக்குக்கண்ணாடி
குளிக்கும் போதும்
அதை அணிந்த்திருப்பேன்
தமிழ் எனக்கு செய்தித்தாள்
அதை படிக்காமல்
பல்துலக்க மாட்டேன்
தமிழ் எனக்கு சொல்லிடப் பேசி
சொல்லாத ரகசியங்கள் அனைத்தையும்
அதனிடம் சொல்லி வைப்பேன்
தமிழ் எனக்கு சேமிப்பு வங்கி
சொற்காசுகளை அதில்
சேமித்து வைப்பேன்
தமிழ் எனக்கு ஆரம்பப் பள்ளி
அங்கு தான் ஆ ஈ
கற்றுக் கொண்டேன்
தமிழ் எனக்கு உயர்நிலைக்கல்வி
இங்கு தான் வார்த்தைகளை ஆளும்
வல்லமை பெற்றேன்