மெல்லிய உணர்வு ஓட்டங்களை
துல்லியமாகக் காட்டுவது கவிதை
பின்னிய வார்த்தைகள் ஒன்றோடொன்று
பிசகாமல் நிற்பது கவிதை
தெள்ளிய நீரோட்டம் போல
தெளிந்து கிடப்பது கவிதை
அடுத்தவர் தோட்டத்து ரோஜாவானாலும்
எல்லோரையும் மகிழ்விப்பது கவிதை
விரும்பியே கைவிரல் கோதும்
அரும்பு மீசை கவிதை
நிரம்பிய வழியும் நித்தம்
புதிய பொங்கல் பானை கவிதை
கண்முன்னே காணும் காட்சிகளை
கவிநயத்தோடு சொல்வது கவிதை
கற்பனைக்கு உயிர் கொடுத்து
கண்முன் காணும் காட்சியாய் மாற்றிடும் கவிதை