Author Topic: ~ தேங்காய் அல்வா ~  (Read 314 times)

Online MysteRy

~ தேங்காய் அல்வா ~
« on: August 17, 2016, 10:21:17 PM »
தேங்காய் அல்வா



தேவையானவை :-

தேங்காய் – 2
காய்ச்சிய பால் – அரை லிட்டர்
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
சீனி – ஒன்றரை கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை :-

தேங்காயை உடைத்து வெண்மையாகத் திருகி பால் ஊற்றி அரைக்கவும்.
அரைத்த விழுதை கார்ன் ஃப்ளோருடன் கலந்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு சீனியைச் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்துக் கிளறவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சீனி கரைந்து கொதித்து அல்வா இறுகி வரும்போது நெய்யில் முந்திரியை வறுத்து அப்படியே போடவும்.
நெய் போட்டதும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வேறு பவுலில் மாற்றவும்.
ஏலப்பொடி தூவவும்.