Author Topic: ~ முந்திரி கிரேவி ~  (Read 369 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226932
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முந்திரி கிரேவி ~
« on: August 14, 2016, 11:07:52 PM »
முந்திரி கிரேவி



முந்திரிபருப்பு – கால் கப்
தக்காளி – ஒன்று
பெரியவெங்காயம் – ஒன்று
பூண்டு – 7 பல்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கறிவேப்பிலை – ஒரு கொத்து
பட்டை, கிராம்பு – தலா 2
சோம்பு – கால் தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் – கால் கப்
சோம்பு – கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறு துண்டு

முந்திரி பருப்பு முற்றுவதற்கு முன் இளசாக ( பிஞ்சு) உள்ள பருப்பு தோலுடன் இருக்கும் அதை சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பை தோல் உரித்து வைக்கவும். (இது சாப்பிட இளந்தேங்காய் போல இருக்கும்)
மிக்ஸியில் அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் தக்காளி மற்றும் கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
வதக்கியவற்றுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி அதனுடன் உரித்து வைத்த முந்திரி பருப்பு சேர்க்கவும்.
அதில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு பருப்பை நன்கு வேகவிட்டு கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான முந்திரிபருப்பு கிரேவி தயார். இது சாதம், இட்லி, சப்பாத்தி, பூரி எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.