Author Topic: ~ சுவையான சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு ~  (Read 323 times)

Offline MysteRy

சுவையான சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு



தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு – அரை கப்
தேங்காய்த்துருவல் – அரை கப்,
நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.
* கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.
* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு – பச்சைப்பயறு புட்டு தயார்.
* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த உணவு.