Author Topic: ~ கோதுமை மாவு பிஸ்கட் ~  (Read 354 times)

Offline MysteRy

~ கோதுமை மாவு பிஸ்கட் ~
« on: August 03, 2016, 10:19:16 PM »
கோதுமை மாவு பிஸ்கட்



தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1/2 கப்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்
எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்
சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு
பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்
விரும்பி சாப்பிடுவார்கள். மாலை டிபன்
« Last Edit: August 03, 2016, 10:22:09 PM by MysteRy »