Author Topic: ~ மெது இட்லி ~  (Read 337 times)

Offline MysteRy

~ மெது இட்லி ~
« on: July 02, 2016, 12:06:43 AM »
மெது இட்லி



தேவையானவை:

இட்லி அரிசி: 3 கப்
பச்சரிசி: 1கப்
உழுந்து: 1 கப்
வெந்தயம்: 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஒன்றாக சேர்த்து ஊறவைக்கவும், உழுந்தை தண்ணீர்விட்டு கழுவியபின் ஊறவைக்கவும், வெந்த்யதை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவிடவும் நன்கு ஊறியப்பிறகு (3 மணி நேரம்),
உழுந்தையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக உழுந்து பொங்கிவரும்வரை ஆரைக்கவும், பின்னர் அரிசியை அரைக்கவும் மாவு மைப்போல் வரும்வரை அரைத்து, அதில் அரைத்த உழுந்து, உப்பு, சேர்த்து சுற்றவும், பாத்திரத்தில் மாற்றி இறுக்கி மூடவும். 7-8 மணி நேரதில் புளித்துவிடும், மெது இட்லி, மொறு மொறு தொசைக்கு சரியாக இருக்கும்