Author Topic: ~ கருப்பை நீர்கட்டியை குணமாக்கும் சமையல் பொருட்கள் ~  (Read 401 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226716
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருப்பை நீர்கட்டியை குணமாக்கும் சமையல் பொருட்கள்



பெண்களின் உடல் ஆண்களின் உடலமைப்பை விட சிக்கலானது. அதனால்தான் பிரச்சனைகள பெண்களுக்கு அதிகமாக தோன்றும். ஹார்மோன் மாறுபாடு டீன் ஏஜ் வயதில் தொடங்கி, வாழ்க்கையின் முடிவு வரை மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
சரியான உணவு, ஆரோக்கியமான தேகம், நல்ல உடற்பயிற்சி, என இருந்தால் என்ன பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கலாம்.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஒருவகையில் அவர்களுக்கு சில நன்மைகளைத் தரும். அந்த ஹார்மோன் சுரக்கும் வரை பெண்களுக்கு புற்று நோய் தாக்கம் இதய நோய் ஆபத்து, எலும்பு தேய்மானம் ஆகியவை ஏற்படாது. இந்த ஹார்மோன் மாற்றத்தினாலும் ஒழுங்கில்லாத வாழ்க்கை முறையினாலும் பெண்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் தோன்றக் கூடும். அப்படி ஒரு பிரச்சனைதான் ஓவரியன் சிஸ்ட் எனப்படும் கருப்பை நீர்க்கட்டி.
பெண்களின் உடலில் இரு கருப்பைகள் உள்ளது. கருமுட்டைகளை உற்பத்தி செய்வது அவைகளின் வேலை. அதேபோல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரான் எங்கின்ற இந்த இரண்டு ஹார்மோன்களும் இனப்பெருக்கத்திற்கு உதவி புரிகின்றன. இவற்றின் மாற்றங்களால் அல்லது, ஏற்கனவே சொன்னது போல் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் திசுக்கள் போல கருப்பையில் தோன்றும். அவைதான் கருப்பை நீர்கட்டி. இதன் அறிகுறிகள், அடிவயிற்றில் கடுமையான வலி, மாதவிடாய் சமயத்தில் அதிகமாக ரத்தப் போக்கு, சீரற்ற மாதவிடாய் ஆகியவைகள் தோன்றும்.
ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு வீட்டிலும் சில நல்ல உணவுகள் இந்த நீர்க்கட்டியை குணப்படுத்துகின்றன. அவை பீட்ரூட் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டும்தான். இரண்டுமே கர்ப்பையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்தும் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளன. பீட் ரூட்டில் பீட்டா சயனின் என்ற பொருள் உள்ளது. அது கருப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் தொற்றுக்களை அழிக்கும் கிருமி நாசிநி. இவை இரண்டும் சம நிலையற்ற ஹார்மோன் சுரப்பினை சரி செய்து, சீராக்குகிறது.
இப்போது இந்த ஜூஸை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் பீட் ரூட் ஜூஸ் – 3 டேபிள் ஸ்பூன் பீட் ரூட்டின் தோலை சீவி ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். அவற்றில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து, கலக்குங்கள். இதில் அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரை கலந்து , குடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு குடித்தால், விரைவில் இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும்.