Author Topic: ~ முள்ளங்கி கீரை சாதம் ~  (Read 455 times)

Offline MysteRy

முள்ளங்கி கீரை சாதம்



முள்ளங்கி கீரை சாதம் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

முள்ளங்கி கீரை- 1 கோப்பை அளவு,
மிளகாய் வத்தல்- 4 எண்ணிக்கை,
பூண்டு, உப்பு, புளி, எண்ணெய்- சிறிதளவு.
சாதம் – 1 கப்

செய்முறை :

• முள்ளங்கி கீரையை சுத்தப்படுத்தி கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
• அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் கீரையை போட்டு வதக்க வேண்டும்.
• பின்னர் மிளகாய் வத்தலை அதில் கிள்ளிப் போடுங்கள்.
• பூண்டையும் தட்டிப் போடவும்.
• புளியை கரைத்து அதில்விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
• சிறிது நேரத்தில் கொதித்ததும், மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து கிளற வேண்டும்.
• கீரையும், புளிக்கரைசலும் பக்குவமாக வந்ததும் அதை அப்படியே சாதத்தில் கொட்ட வேண்டும்.
• பின்னர் நன்றாக கிளறி விடுங்கள். அதன் பின்பு சாதத்தை ஆற வைத்து சாப்பிடலாம்