Author Topic: ~ கோதுமை மாவு இடியப்பம் ~  (Read 383 times)

Offline MysteRy

கோதுமை மாவு இடியப்பம்



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு காய்ந்த பானில் கோதுமை மாவை எடுத்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
பின்பு தீயை அணைத்து விட்டு அதனுடன் அரிசி மாவை சேர்க்கவும்
பின்பு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் நீா விட்டு கொதிக்க வைக்கவும்
அதனை மாவுடன் சேர்க்கவும்
பின்பு மாவை நன்கு பிசையவும்
பின்பு அதனை மூடி 15 நிமிடம் வைக்கவும்
பின்பு அதன் மீது சிறிது எண்ணெய் விடவும்
மாவினை மீண்டும் பிசையவும்
பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்
பின்பு சிறிது மாவை எடுத்து இடியப்பம் அச்சில் வைக்கவும்
பின்பு இட்லி தட்டில் இடியப்பங்களாக வைக்கவும்
அனைத்து தட்டிலும் வைக்கவும்
பின்பு அவற்றை இட்லி குக்கரில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்
இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைக்கவும்
பின்பு கரண்டியால் அதனை எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்
கோதுமை இடியப்பம் ரெடி