Author Topic: ~ எலும்புகளை உறுதியாக்கும் கிவி ஜூஸ் ~  (Read 427 times)

Offline MysteRy

எலும்புகளை உறுதியாக்கும் கிவி ஜூஸ்



தேவையான பொருட்கள்:

கிவிப் பழங்கள் – 4,
தேன், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு.

செய்முறை:

* கிவிப் பழத்தைச் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்க வேண்டும்.
* சிறிதளவு தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

பலன்கள் :

ஒரு கப் கிவி ஜூஸில் ஒரு நாளைக்குத் தேவையான அளவைவிட வைட்டமின்-சி அதிகமாக இருக்கிறது.
கிவி ஜூஸை சீரான இடைவெளியில் அருந்திவந்தால், எலும்புகள் உறுதிப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஓமேகா – 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதில் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
இதய நோய்களில் இருந்து காக்கும், நரம்பு மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி இதை அருந்த வேண்டும்