Author Topic: ~ பச்சைப்பயறு துவையல் செய்முறை விளக்கம் ~  (Read 344 times)

Online MysteRy

பச்சைப்பயறு துவையல் செய்முறை விளக்கம்



தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு – அரை கப்,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
புளி – கோலி அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

* வெறும் வாணலியை சூடாக்கி, பச்சைப்பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.
* பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்து ஆற வைக்கவும்.
* அனைத்தும் ஆறியபின், மிக்சியில் பச்சைப்பயறு, பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
* சுவையான சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.
* இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.