Author Topic: ~ ஆட்டு குடல் மிளகு கூட்டு ~  (Read 417 times)

Online MysteRy

ஆட்டு குடல் மிளகு கூட்டு

தேவையானப் பொருட்கள்

ஆட்டு குடல் – அரை ஆட்டு குடல்
தக்காளி – இரண்டு
வெங்காயம் – இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு டேபுள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பச்ச மிளகாய் – ஒன்று
உப்பு – தே. அளவு

வறுத்து பொடிக்க

பட்டை – ஒரு சிறிய துண்டு
ஏலம் – ஒன்று
லவங்கம் – இரண்டு
மிளகு – ஒறு டேபுள் ஸ்பூன்
சீரகம் – அரை டேபூள் ஸ்பூன்
சோம்பு – கால் டேபுள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணை – இரண்டு டேபுள் ஸ்பூன்
வறுத்து பொடி செய்த பொடி
கொத்து மல்லி – இரண்டு டேபுள் ஸ்பூன்



செய்முறை

குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்ச மிளகாய் உப்பு போட்ட்டு ஐந்து டம்ள்ர் தண்ணீர் விட்டு குக்கரி பத்து நிமிடம் மீடியௌம் தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வைத்து வேக விடவும்.
வெந்து ஆவி அடங்கியதும் அது தண்ணீர் ஓடு தான் இருக்கும். தண்ணீரை வற்றவிட வேண்டும்.
வற்றியவுடன் பெரிய இரும்பு கிடாய் (அ) வானலியில் எண்ணை ஊற்றி வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு மூன்று முரை கிளறி மூடி போடவும்.
நல்ல இதே மாதிரி இரண்டு மூன்று தடவை கிளறி கொத்து மல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:

இரண்டு மூன்று தடவை கிளறும் போது பட் பட் என்று வெடிக்கும் பார்த்து கொஞ்சம் தள்ளி நின்றுக் கொள்ளுங்கள், குடல் சால்னாவை விட இது ரொம்ப நல்ல இருக்கும்.