Author Topic: ~ பருப்பு ரசம் – சமையல் குறிப்பு ~  (Read 382 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226934
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பருப்பு ரசம் – சமையல் குறிப்பு



தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு வெந்த தண்ணீர் – 2 கப்
புளி – எலுமிச்சம்பழ அளவு
தக்காளி – 1
மிளகு – ¼ ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தனியா – ½ ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பூண்டு பல் – 4
கடுகு – ¼ ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

மிளகு, சீரகம், தனியா, மூன்றையும் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக் கொள்ளவும்.பருப்புத் தண்ணீரில் தக்காளியை நறுக்கிப் போட்டு, புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி, கொதிக்க வைக்கவும். தக்காளி வெந்ததும் இறக்கவும். அதில் சீரகத் தூளைப் போட்டு. தட்டிய பூண்டையும் போடவும்.அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் போட்டு, வரமிளகாய் கிள்ளிப் போட்டு, வெந்த தக்காளி, பருப்புத் தண்ணீரை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை, கறுவேப்பிலை போடவும்.
நன்றி.