Author Topic: ~ உங்களுக்கு எப்போதாவது பறப்பது போன்ற கனவு வந்துள்ளதா? ~  (Read 953 times)

Offline MysteRy

உங்களுக்கு எப்போதாவது பறப்பது போன்ற கனவு வந்துள்ளதா?

கனவு என்பது பொதுவானது, இயல்பானது. பொதுவாக உங்கள் ஆழ்மனதில் புதைக் கொண்டிருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடு தான் கனவுகள் என ஒரு கூற்று இருக்கிறது. அதே சமயத்தில், ஒவ்வொரு கனவும், உங்களுக்கு ஓர் செய்தியை உணர்த்த தான் வருகிறது என்றும் நம்பப்படுகிறது.



பாம்பு கனவில் வருவது, கடவுள் வருவது, திருமணம் ஆவது போன்ற கனவு, இறப்பது போன்ற கனவு என பல கனவுகள் தோன்றலாம். இதில், சில சமயங்களில் உங்களுக்கு வானில் பறப்பது போன்ற கனவுகள் வரலாம். இது ஏன் தோன்றுகிறது, இந்த கனவு கூறும் செய்தி என்ன என்பது பற்றி இனிக் காணலாம்…
சைகோதெரபிஸ்ட்
பறப்பது போன்ற கனவு வருவது ஏன் என்பதற்கு சிகாகோவை சேர்ந்த சைகோதெரபிஸ்ட் ஒருவர் பதில் அளித்துள்ளார். இதில், நீங்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான நபர் உங்கள் கனவில் பறப்பது போன்று வருவது ஏன் என அவர் கூறியுள்ளார்.
அர்த்தம்
கனவு என்பது இயற்கையானது. பறப்பது போன்ற கனவு வருவது சுதந்திரத்தை குறிப்பது. நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுப்படுவதை இது குறிக்கிறது.
என்ன தெரிந்துக் கொள்ள வேண்டும்?
பறப்பது போன்ற கனவு வருவதை வைத்து நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், தடைப்படும் சூழல்களில் இருந்து வெளிவர வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த கனவுகள் மூலம் நீங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
கலாச்சாரங்கள்
உலகின் அனைத்து கலச்சாரங்களிலும் பறப்பது போன்ற கனவு வருவது சுதந்திரம் அல்லது அன்றாட மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதை தான் குறிக்கிறது.
யாருக்கு இது போன்ற கனவுகள் அதிகம் வரும்?
கனவு என்பது மிக மிக இயல்பானது. ஆயினும் பறப்பது போன்ற கனவுகள் வளர்ந்த ஆண்கள் மத்தியில் அதிகம் வருவதாக சைகோதெரபிஸ்ட் கூறுகிறார்.
ஆண்களிடம் அதிகமாக தென்படுவது ஏன்?
இன்றைய வாழ்வியல் முறையில் ஆண்கள் தான் தொழில் ரீதியாக, வேலை ரீதியாக நிறைய பேச்சுவார்த்தை சிக்கல்கள், சூழ்நிலைகளை சந்திக்கின்றனர். அலுவலகத்தில் துவங்கி, வீடு, படுக்கையறை என ஆண்கள் பொருளாதாரம், சமூகம், உணர்ச்சி நிலை என பல வகைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆண்களிடம் அதிகமாக தென்படுவது ஏன்?
இது போன்ற மன அழுத்தங்களில் இருந்து வெளிவரும் போது, அல்லது வெளிவர வேண்டும் என்ற சூழலில் பறப்பது போன்ற கனவுகள் வரலாம். மேலும் உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிசெல்லும் போதும் இந்த கனவு வரலாம்.