Author Topic: ~ உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட் ~  (Read 449 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226675
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட்



தேவையான பொருள்கள்:

பேபி உருளைக்கிழங்கு = அரை கிலோ
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
சீரகப்பொடி = 1 ஸ்பூன்
இஞ்சி = அரையங்குலம்
பூண்டு = 10 பல்
சின்ன வெங்காயம் = அரை கப்
சாட் மசாலா = 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா = 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் = 1 கப்
பனீர் = 25 கிராம்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை மஞ்சள் பொடி சேர்த்து வேக விட்டு உரித்துக் கொள்ளவும். அதனோடு தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி, சீரகப்பொடி சேர்க்கவும்.
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டை உரித்து சதசதப்பாக அரைத்து சேர்க்கவும். இதை எண்ணெய் தேவையான அளவு சேர்த்து வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது தண்ணீர் தெளித்தால் மட்டும் போதும்.
நன்றாக சிவக்கும் வரை கை விடாது கிளறவும். 5 நிமிடம் கழித்து சாட் மசாலாவையும் சேர்த்து தேவையானால் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
பனீரை பொடியாக நறுக்கவும்.வெங்காயத்தாளை ஓரங்குல துண்டுகளாக ஒரு கப் அளவிற்கு நறுக்கவும். நன்றாக கிழங்கு வதங்கியதும் இவற்றை சேர்க்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட் தயார். இதை எல்லா விதமான ரைஸிற்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் ரைஸ், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.