Author Topic: ~ ஐயங்கார் பீர்க்கங்காய் கூட்டு ~  (Read 439 times)

Offline MysteRy

ஐயங்கார் பீர்க்கங்காய் கூட்டு

தேவையான பொருட்கள் :

து.பருப்பு : 100 கிராம்
தேங்காய் துருவல் : 1/4 மூடி
சீரகம் : 1 டி ஸ்பூன்
ப.மிளகாய் : 2 to 3 Nos (அவரவர் காரத்திற்கேற்ப)
கடுகு : 1 டி ஸ்பூன்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
எண்ணை : 1 டி ஸ்பூன்
பீர்க்கங்காய் : 3 Nos (தோல் சீவி சிறிய துண்டங்களாக நறுக்கவும்)
உப்பு : ருசிக்கேற்ப

 

செய்முறை :

து.பருப்பை 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
பீர்க்கங்காயுடன் 1 கரண்டி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
வெந்த காயுடன் பருப்பு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.