Author Topic: ~ ஆரஞ்சு பச்சடி ~  (Read 457 times)

Offline MysteRy

~ ஆரஞ்சு பச்சடி ~
« on: April 29, 2016, 06:40:46 PM »
ஆரஞ்சு பச்சடி



தேவையான பொருட்கள் :

ஆரஞ்சுப் பழம் – 2
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
பனை வெல்லம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி, – ஒரு சிறிய துண்டு
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

ஆரஞ்சுப் பழத்தின் தோலை நீக்கிய பின், தோலைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும். இஞ்சியின் தோலை சீவிப் பொடியாக நறுக்கவும்.
பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய் என்பவற்றை நன்றாக வதக்கி, வெந்ததும் புளியைக் கரைத்து, உப்பு, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும். பழத்தின் விதையை எடுத்துவிட்டு, சுளையைச் சேர்த்து, நன்கு கலக்கவும்.