Author Topic: ~ பள்ளிபாளையம் கோழி வறுவல் ~  (Read 365 times)

Offline MysteRy

பள்ளிபாளையம் கோழி வறுவல்



கோழி (நாட்டு கோழி) – 1 கிலோ
வர மிளகாய் – 15 to 20
சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 4 பல்லு
கருவேப்பிலை – 12
எண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்

கோழி கறியை சிறுசு சிறுசா அறுத்துட்டு ,, தண்ணீல நல்லா கழுவீறுங்க. மஞ்சள் தூள், உப்பு கொஞ்சம் போட்டு கோழி கறியை நல்லா கலக்கி வெச்சுருங்க.
வட சட்டியில் எண்ணெய் கடுகு போட்டு தாளிச்சிட்டு , சின்ன வெங்காயத்தை சிறுசு சிறுசா அருஞ்சு போட்டுருங்க,, ஓரளவு வெங்காயம் பொன்நிறம் வந்ததும் , வர மிளகாயில் விதைகளை எடுத்துட்டு எல்லா மிளகாயையும் கில்லி போட்டுட்டு பூண்டு துண்டுகளையும்,கருவேப்பிலையையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி ரெண்டு நிமிஷம் விட்ருங்க ,
இப்போ கோழி கறியை தாளிச்சு வெச்சுருகிற வெங்காயம்
வரமிளகாயுடன் சேர்த்து நல்லா கலக்கி விடுங்க, மஞ்சளும் , உப்பும் , மறுபடியும் வேணும்னா கொஞ்சம் சேர்த்துகுங்க,
தயவு செய்து தண்ணீர் ஊத்திராதீங்க
கொத்துமல்லி சேர்த்து மூணு நிமசதுக்கு ஒருக்கா நல்லா கலக்கி விடுங்க 20 பது நிமிஷம் கழிச்சு பாருங்க .
முக்கால் கிலோ கோழிதான் இருக்கும், ஏன்னா டேஸ்ட்டு பார்க்குறேன்கிற பேருலே கால் கிலோ சிக்கென்னை நீங்களே
சாப்பிட்டு முடுச்சிருப்பீங்க ..