Author Topic: ~ காராமணி கத்தரிக்காய் வறுவல் ~  (Read 302 times)

Online MysteRy

காராமணி கத்தரிக்காய் வறுவல்



தேவையான பொருட்கள்

காராமணி – 2௦௦ கிராம்
கத்தரிக்காய் – 2௦௦ கிராம்
வெங்காயம் – 15௦ கிராம்
தக்காளி – 1௦௦ கிராம்
புளி – 25 கிராம்
கடுகு – 1௦ கிராம்
மிளகாய் தூள் – மூன்று தேகரண்டி
மஞ்சள் தூள் – கால் தேகரண்டி
தனியாதூள் – இரண்டு தேகரண்டி
எண்ணெய் – 5௦ மில்லி லிட்டர்

செய்முறை

காராமணியை இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள் போட்டு நன்றாக கலக்கவும்.
கத்தரிக்காய், காராமணி சேர்த்து வதக்கி நீர்விட்டு வேகவைக்கவும்.