Author Topic: ~ சுறுசுறுப்பு வேண்டுமா? ஆப்பிள் அல்வா சாப்பிடுங்கள்! ~  (Read 342 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுறுசுறுப்பு வேண்டுமா? ஆப்பிள் அல்வா சாப்பிடுங்கள்!

கலோரிகள் குறைவாக உள்ள ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகி , இரத்த ஓட்டச்சுழற்சி சீராக இயங்குகிறது.



100 கிராம் ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துக்கள்
கொழுப்பு 0.2 கிராம், சோடியம்1 மிகி, பொட்டாசியம் 3 %, கார்போஹைட்ரேட் 14 கி, சர்க்கரை சத்து 10 கி, புரோட்டின்0,3 கி, விட்டமின் A, D, B12, B6, C, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.
குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். ஏன் பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஆண்மைபலம் விருத்தியடையும்.
140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.
ஆப்பிளை அப்படியே உண்ணலாம். சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்து உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.
ஆப்பிள் அல்வா
ஒரு கனமான வாணலியில் பாலை ஊற்றி அதில் ( துருவிய ) ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.
சிறிது பாலில் கோதுமை மாவை கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும்.
அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும், சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
பயன்கள்
கோதுமையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் அல்வா என்பதால் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
வாரம் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாகும்.