Author Topic: ~ மசாலா கேக் ~  (Read 363 times)

Offline MysteRy

~ மசாலா கேக் ~
« on: April 02, 2016, 09:17:26 PM »
மசாலா கேக்



மைதா – 100 கிராம்
முட்டை – 2
பட்டர் – 100 கிராம்
பொடி செய்த சீனி – 100 கிராம்
வெனிலா எசன்ஸ் – 5 துளிகள்
பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
பொடி செய்த நட்ஸ் – 2 தேக்கரண்டி
மசாலா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சீனி – ஒரு தேக்கரண்டி
மைதா மாவு – ஒரு தேக்கரண்டி
மசாலா செய்யத் தேவையானவை:
பட்டை – கால் அங்குலத் துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
மிளகு – 5
மல்லி விதை – அரை தேக்கரண்டி

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும். மசாலா செய்யக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
பொடி செய்த மசாலாவுடன் ஒரு தேக்கரண்டி மைதா மாவு, ஒரு தேக்கரண்டி சீனி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் பொடி செய்த நட்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
பட்டருடன் பொடித்த சீனியைச் சேர்த்து பீட்டரால் அடிக்கவும்.
அதனுடன் முட்டையை ஊற்றி வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு சலித்து வைத்துள்ள மைதா மாவுக் கலவையைச் சேர்த்து, மரக் கரண்டியால் மெதுவாக ஒரே திசையில் கலந்துவிடவும்.
பேக்கிங் ட்ரேயில் சிறிது மாவுக் கலவையை ஊற்றி, அதன் மேல் சிறிது மசாலாக் கலவையைத் தூவவும். அதன் மேலே மீதமுள்ள மாவை ஊற்றி, மீதமுள்ள மசாலாவைத் தூவிவிடவும்.
ட்ரேயை முற்சூடு செய்த அவனில் வைத்து 30 – 40 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததை உறுதி செய்து வெளியே எடுத்து ஆறவிடவும்
சுவையான, மணமான மசாலா கேக் தயார். டீயுடன் பரிமாறலாம்.