ஏதோ தெரிந்த அரைகுறை தமிழில் கிறுக்கும் கிறுக்கல்களை
கவிதை என்று ஒப்புக்கொண்டு கவிஞரே என்று வார்த்தைக்கு
வார்த்தை வாயார அழைத்ததால், உண்மையிலே ஒரு கவிஞனாய்
காட்டி கொள்ள முயற்சிக்கும் விதமாய் சில சிலேடை பயன்படுத்தினேன்
தவிர, திட்டவோ ,கேலி செய்யவோ எண்ணம் எள்ளளவும் இல்லை
என்பது திண்ணம். .அன்னமே , வானவில்லும் காணாத வண்ணமே
சண்டை என்ன சண்டை மண்டையே உடையும் அளவிற்கு
கோபம் கொண்டாலும் அப்படியே ஏற்றுகொள்வேன்
உன் கோபத்தையும் கூட !