Author Topic: ~ மண்டி(செட்டிநாடு) ~  (Read 423 times)

Online MysteRy

~ மண்டி(செட்டிநாடு) ~
« on: March 30, 2016, 10:57:14 PM »
மண்டி(செட்டிநாடு)



பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 6
பூண்டு – 6
மொச்சை – 50 கிராம்
வெண்டைக்காய் – 6
புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
மிளகாய் பொடி – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்
உப்பு

தாளிக்க:

சோம்பு
வெந்தயம்
கறிவேப்பிலை

வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி வைக்கவும்.
வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கி வைக்கவும். மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து, காலையில் சமைக்கும் முன் குக்கரில் வேக வைத்து வைக்கவும். புளியை இரண்டு டம்ளர் அரிசி களைந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு, பச்சைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதங்கியதும் வெண்டைக்காய், மொச்சை, புளி கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
நன்றாக கெட்டியாக வந்ததும் இறக்கவும்.