Author Topic: ~ ஆட்டுக் குர்மா ~  (Read 387 times)

Offline MysteRy

~ ஆட்டுக் குர்மா ~
« on: March 25, 2016, 10:49:06 PM »
ஆட்டுக் குர்மா



1 கிலோ – ஆட்டிறைச்சி
1 கப் – தயிர்
2 – பெரிய வெங்காயம்
3-4 தேக்கரண்டி – சமையல் எண்ணை
2 தேக்கரண்டி – பூண்டு விழுது
2 தேக்கரண்டி – அரைத்த இஞ்சி
2 – பட்டை
6 – பூ
10 – மிளகு
5 – ஏலக்காய்
2 தேக்கரண்டி – மல்லித்தூள்
1 தேக்கரண்டி – சீரகத்தூள்
1/2 தேக்கரண்டி – மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி – பட்டை மிளகாய் தூள்
1/4 தேக்கரண்டி – ஜாதிக்காய் தூள்
2 – பெரிய தக்காளி

செய்யும் முறை

1) ஆட்டிறைச்சி துண்டுகளை சுத்தம் செய்து அதனுடன் தயிர் கலந்து பிசையவும்.
2) அடுப்பில் சட்டி காய்ந்தவுடன் எண்ணை ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக் வதக்கவும். அதன்பிறகு அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
3) பின் பட்டை, பூ, மிளகு, ஏலக்காய் போட்டு வதக்கவும். அதன்பிறகு மசாலைத் தூள்கள் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
4) அதன்பிறகு ஊறவைத்த ஆட்டிறைச்சி துண்டுகளை போட்டு கிளறவும். பின் தக்காளிப் பழங்களைப் போட்டு கிளறி மூடவும்.
5) ஒரு வேளை இந்தக் கலவையில் நீர் போதவில்லை என்றால் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
6) இறைச்சி நன்றாக வெந்தப் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு இறக்கவும்.
7) ஆட்டுக் குர்மா பரிமாறத் தயார்!