Author Topic: ~ ரிச் கிங்ஸ் வெஜிடேரியன் ஆம்லெட் ~  (Read 568 times)

Offline MysteRy

ரிச் கிங்ஸ் வெஜிடேரியன் ஆம்லெட்



மைதா – 1 கப்,
பால் – அரை கப்,
உப்பு, நெய் – தேவைக்கேற்ப,images
பொடித்த முந்திரி – 1 டீஸ்பூன்,
துருவிய பனீர் – கால் கப்,
கேரட் துருவல் – 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய், கொத்தமல்லி – சிறிது,
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் – சிறிது,
மிளகுத் தூள் – சிறிது,
சீஸ் – 1 துண்டு.

மைதா, பால், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், துருவிய பனீர் எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை சற்று கனமான தோசை மாதிரி ஊற்றவும். அதன் மேல் துருவிய கேரட், முந்திரி, கொத்தமல்லி, துருவிய சீஸ் சேர்த்து மூடி வைத்து, வேக விடவும். சுற்றிலும் நெய் விட்டு, மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். திருப்பிப் போட வேண்டாம். சாஸ் உடன் பரிமாறவும்.