Author Topic: பிழை புரியும்...,  (Read 564 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
பிழை புரியும்...,
« on: March 19, 2016, 07:25:31 PM »
சாத்தானொன்றின்
பிடியிலிருக்கிறது
தேவதையொன்று...
தேவதையொன்றின்
மடியிலிருக்கிறது
சாத்தானொன்று...
நாம்
கவனிக்கிறோம்....
சாத்தானின் பிடியை
இன்னும் அப்படியே
இறுகாமலிருக்கிறது
சற்றே நிமிர்ந்து
கண்களை கவனிக்கிறோம்
சாந்தமாய் தானிருக்கிறது
மீண்டும்
கரங்களை கவனிக்கிறோம்
பிடி
தளரத்துவங்குகிறது
தேவதையென்னவோ
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது
விடுவிக்கப்பட்ட தேவதையின்
விழிகளில் வலியில்லை
சிநேகமாய்
சிரித்தபடி
சிறகுவிரித்துப்பறக்கிறது
நானும் நீங்களும்
பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறோம்
பெருமூச்சொன்றை..
இப்போது
சாத்தான் மட்டும்
அழ ஆரம்பிக்கிறது....
கவனம் திருப்புகிறோம்
பிழை புரிகிறது
சாத்தானை வைத்திருந்த
தேவதையை
யாரேனும் கவனித்திருக்கலாம்

Offline SweeTie

Re: பிழை புரியும்...,
« Reply #1 on: March 23, 2017, 06:13:45 AM »
piraba  migavum  niyayamaana kavithai.    sirapu

Offline EmiNeM

Re: பிழை புரியும்...,
« Reply #2 on: March 23, 2017, 11:35:07 AM »
Nanba,

Miga arumaiyana kavithai,.. nam kangal ipoluthu devadhayin madiyil irukum saatanai nokatum.

devadhai vidupadatum,..

un kavithayin azhagirkum karuthin aazhathirkum endrum rasigan naan..

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: பிழை புரியும்...,
« Reply #3 on: March 25, 2017, 09:46:46 AM »
Azhagiya kavithai prba na;) vazhthukkal ;)

Offline Maran

Re: பிழை புரியும்...,
« Reply #4 on: March 25, 2017, 06:21:04 PM »




நல்ல சிந்தனை வளம். வாழ்த்துக்கள் நண்பா பிரபா!