Author Topic: ~ கீரைத்தண்டு புளிக்கறி ~  (Read 416 times)

Offline MysteRy

கீரைத்தண்டு புளிக்கறி



தண்டன்கீரை – 1 கட்டு
தேங்காய் – ½ மூடி (துருவியது)
சின்ன வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
புளி – நெல்லிக்காயளவு
வத்தல் மிளகாய் – 2
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது?

புளியை சிறிது தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
கீரையை பொடிப்பொடியாக ந்றுக்கிக்கொள்ளவும். கீரைத்தண்டை 1 இஞ்ச் நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவும்.
கீரைத்தண்டு புளிக்கறி
கீரையையும், தண்டையும் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
தேங்காய், 2 சின்ன வெங்காயம், மிளகாய் பொடி, சீரகம் இவற்றை தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கீரை வெந்ததும் அதனுடன் அரைத்த விழுதும், புளிக்கரைசலும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த‌தும் கடுகு, வத்தல் மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் மீதி இருக்கும் 2 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி விட்டு அதை குழம்புடன் கொட்டவும்.