Author Topic: ~ வெங்காய மசாலா குழம்பு ~  (Read 336 times)

Offline MysteRy

வெங்காய மசாலா குழம்பு



பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
தக்காளி – 2
பூண்டு – 6 பற்கள்
காய்ந்த மிளகாய் – 15
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க

தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைத் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
வதக்கியவற்றைச் சிறிது நேரம் ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது தேவையெனில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான காரசாரமான வெங்காய மசாலா குழம்பு ரெடி.