Author Topic: ~ நண்டு வறுவல் ~  (Read 423 times)

Offline MysteRy

~ நண்டு வறுவல் ~
« on: March 11, 2016, 10:58:44 PM »
நண்டு வறுவல்



நண்டு-5oogm
மிளகு-3tsp
பூண்டு -4பல்
வெங்காயம் -2
தக்காளி -4
தேங்காய் பால்-500ml
மல்லித்தழை-2tbsp
எலுமிச்சைபழம்-1
எண்ணெய்-1குழிகரண்டி
பட்டை-1inch துண்டு
கிராம்பு-3
மிளகாய்தூள்-1tsp
உப்பு-தேவைக்கு

நண்டைசுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.
பூண்டையும் மிளகையும் மைய்ய அரைத்து கோள்ளவும்
தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு வெடித்ததும் மிளகு பூண்டு பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்
தக்காளி மற்றும் நண்டை போட்டு கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும்
தெங்காய்பால் மிளகாய்தூள், உப்பு போட்டு தளதளவென்று வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்