Author Topic: ~ வல்லாரை சாலட் ~  (Read 325 times)

Online MysteRy

~ வல்லாரை சாலட் ~
« on: March 11, 2016, 09:07:31 PM »
வல்லாரை சாலட்



வல்லாரைக்கீரை – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பெரிய பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப் (125 கிராம்)
எலுமிச்சை பழம் – ஒன்று
உப்பு – ஒரு மேசைக்கரண்டி அல்லது தேவையான அளவு

வல்லாரைக்கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வல்லாரைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த வல்லாரைக் கீரை கலவையுடன் தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசறி 10 நிமிடம் வைத்திருக்கவும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து பரிமாறவும். செய்வதற்கு சுலபமான வல்லாரை சாலட் ரெடி. இதைப் போல் செய்து சாப்பிடுவதால் வல்லாரையில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக நமக்கு கிடைக்கும்.