வட்டமிடும் உன் வண்ண விழியும்
துடிக்கும் இமைகளும்
கொஞ்சும் இதழ்களும்
குலுங்கும் நடையும்
புத்தம் புது கொலுசு
சிந்திடும் சத்தமுடன்
நீ நடந்து வருகையில்
தத்தி வரும் கடலலையும்
கரையில் உன் கால்கள் விட்ட
சுவடுகளை முத்தமிடும்
எட்டி நிற்கும் வெள்ளி நிலவும் - உன்
முகம் காண
மேகங்களை விட்டொதுங்கி
வெளியில் வரும்
வாய் வெடித்த மொட்டு
மலரும் - உன்
சிகை சேர துடிக்கும்
படுத்து விட்ட பட்ட
மரமும் - உன்
கைகள் பட்டுவிட
பூ மலரும்