Author Topic: ~ உருளைக்கிழங்கு போண்டா ~  (Read 349 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226671
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு போண்டா



கடலை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் (நடுத்தரமானது) – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – அரை அங்குல துண்டு
கொத்தமல்லி – 2 கொத்து
மிளகாய் வற்றல் – 3
அரிசி மாவு – ஒரு கப்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
உருளைக்கிழங்கு – 2
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி + ஒரு கப்
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
டால்டா – 1 1/2 மேசைக்கரண்டி

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாய் வற்றலை அரைத்துப் பொடி செய்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பொட்டுக்கடலை, பெருங்காயத் தூள், நறுக்கின பச்சை மிளகாய், இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், அரைத்தேக்கரண்டி உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு லேசாக மசித்து பிரட்டி விட்டு வேக விடவும்.
ஒரு நிமிடம் வேகவைதால் போதுமானது. பின்னர் வாணலியில் இருந்து எடுத்து, உருளை மசாலாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுத்துக்கொண்டு அத்துடன் அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி உப்பு, டால்டா, மிளகாய் பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிகவும் தளர்வாக இல்லாமல் தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்த மசாலா உருண்டையை மாவில் தோய்த்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடவும். இதனை தேங்காய் சட்னியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மாலை நேரத்திற்கு ஏற்ற நல்லதொரு சிற்றுண்டி.