Author Topic: தினமும் டீ குடித்தால் உடல் குண்டாவதில் இருந்து தப்பிக்கலாம்!  (Read 2263 times)

Offline Yousuf



நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் கோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து எலிகளை வைத்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த எலிகளை மேலும் பல சிறு குழுக்களாக பிரித்து, இவற்றுக்கு 14 வாரங்கள் வரை தொடர்ந்து தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ கொடுத்தனர். பின்னர் அந்த எலிகளை ஆய்வு செய்ததில், இரண்டு வகையான டீ குடித்த எலிகளின் உடல் பருமன் குறைந்திருந்தது. மேலும் வயிற்று பகுதியில் தேவையற்ற சதை வளர்வதற்கு உதவும் கொழுப்பு சத்தையும் இந்த டீ கரைத்து விடுவது ஆய்வில் தெரியவந்தது.

அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. 2ம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கிரீன் டி  குடிச்ச வெயிட் குறையுமாம் ..... நானும் இது கேள்வி பட்டு இருக்கேன்
                    

Offline Yousuf



Offline Yousuf