Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் ~ (Read 346 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226753
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் ~
«
on:
February 15, 2016, 09:14:47 PM »
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு சில உணவுகளை பார்த்தவுடன் நாவின் ருசியை அடக்கிகொள்ள முடியாமல் வெளுத்துக்கட்டுகிறோம்.
ஒரு புறம் ஜிம்மில் உடற்பயிற்சி, மறுபுறம் பசியை தீர்ப்பதற்காக கண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் கட்டான உடலமைப்பை பெறலாம்.
எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.
பாதாம்
நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பை தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், விட்டமின் இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
ஆரோக்கியமான நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். முந்தைய நாள் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வை தரும். ஆன்டி ஆக்சிடன்ட், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்சனையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.
வாழைப்பழம்
வாழையில் உள்ள பொட்டாஷியம் சத்து, மாவு சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வும், கல்லீரலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். பசித்த வயிறுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதால் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இரவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ப்ராக்கோலி
புற்றுநோயை எதிர்க்க கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பக புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் ப்ராக்கோலியில், 30 கலோரிகள் கிடைக்கும்.
இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
பிரவுன் அரிசி
ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
கொழுப்பை சேரவிடாத மாவு சத்துதான் இதில் உள்ளது என்பதால் தினமும் வெள்ளை அரிசிக்கு பதிலான பிரவுன் அரிசிக்கு மாறலாம். சீரான எடையை பராமரிக்க எளிய வழி.
கேரட்
நீர் சத்து, நார்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் உணவாக இருக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொள்ளு
கொழுப்பை கரைக்க கூடியது கொள்ளு. கொழுப்பை எரிக்கும். உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்துவிடும். மாவுசத்துக்கள் கொழுப்பாக சேராமல் தடுக்கப்படும். இதய நோய், மூப்படைதல் ஆகியவை தடுக்கப்படும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் ~