Author Topic: ~ தோல் வியாதி குணப்படுத்தும் கல்லுருவி ~  (Read 321 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தோல் வியாதி குணப்படுத்தும் கல்லுருவி



மூலிகையன் பெயர் :- கல்லுருவி.

தாவரப்பெயர் :- Ammannia baccifera.

மருத்துவப்பயன்கள் :- கல்லுருவி இலைகள் புண்களைப் போக்க வல்லது. காச்சலைப் போக்கும். புற்றுநோயால் அழியும் செல்களைப் புதிப்பிற்கும் தன்மையுடையது. மேலும் இது பற்றி பல ஆராய்ச்சிகள் மேல் நாட்டில் செய்து கொண்டுள்ளார்கள். இதன் மூலிகை இனம் காண்பதில் சில சிக்கல்கள் உள்ளதாகச் சொல்வர்.

கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்பளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விடத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்பகற்றும். இலைச்சாற்றை வண்டு கடிக்குப் பூசினால் குணமடையும். இதன் இலைகளில் ‘சி’ வைட்டமீன் உள்ளது.

இதன் இலைச்சாற்றை உடல் மீது தடவினால் தோல் வியாதி குணமடையும். காச்சலும் குணமடையும். ரணமான புண்களைக் குணப்படுத்த இதன் சமூலத்தை அரைத்து வைத்துக் கட்ட குணமடையும். உண்ணும் உணவுடன் இலைச்சாறு கலந்து விட்டால் அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும் கவனத்துடன் கையாழ வேண்டும்.