Author Topic: ~ வயிற்று கோளாறுகளை போக்கும் இலந்தை ~  (Read 364 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வயிற்று கோளாறுகளை போக்கும் இலந்தை



இலந்தைப் பழம் என்பது நாம் சுவைக்காக சாப்பிடுவது மட்டும் அல்ல. அதனுள் சுகந்தரும் மருத்துவப் பொருட்கள் பொதிந்து இருக்கிறது. இலந்தை ஓர் மர வகையைச் சார்ந்தது. முட்கள் நிறைந்தது. இது பதினைந்து அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியது. இதன் இலைகள் முட்டை வடிவிலும் பூக்கள் மென்மையான பசுமை நிறமும் சற்றுக் கூடுதலாக மஞ்சள் நிறமும் கொண்டு இருக்கும்.

நாட்டு இலந்தையின் பழம் இனிப்புச் சுவையும் புளிப்புச் சுவையும் கலந்த ஒன்று. இதன் பட்டை மற்றும் இலை மிகவும் துவர்ப்பு குணமுடையது. காட்டு இலந்தை புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியன கலந்த ஒன்றாகும். இலந்தையின் பழம் வற்றச் செய்யும் மருத்துவ குணத்தை உடையது. வலி நீக்கியாக விளங்குகிறது. குளிர்ச்சி தரும் தன்மை உடையது. வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையுடையது. பழம் நன்கு பழுத்த நிலையில் மல மிளக்கியாகும்.

நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது.சத்தான உணவாவது, உரம் தருவது, மேற்பூச்சாக உதவுவது, இருமலுக்கு மருந்தாவது, ஒவ்வாமைக்கு எதிரானது, ஈரலுக்கு பலம் தரவல்லது, மன உளைச்சலைப் போக்கக் கூடியது, புண்ணாவதைத் தடுக்கக் கூடியது (அல்சர்). இலந்தையின் விதைகள் வயிற்றுப் போக்கைத் தணிக்கக் கூடியது. வறட்டு இருமலை போக்கக் கூடியது. தோல் நோய்களைத் துடைக்கக் கூடியது. விதைப் பருப்பு கடுப்பைத் தணிக்கக் கூடியது.

லேசான மயக்க மூட்டி, வாந்தியைக் தடுக்கக் கூடியது. தூக்கமின்மையை போக்கக் கூடியது. இலந்தையின் மரப்பட்டை வற்றச் செய்யும் தன்மை உடையது. பேதியை நிறுத்தக் கூடியது. இலந்தையின் வேர்ப் பட்டைச் சாறு வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியது. மேற்பூச்சாக மூட்டு வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் கரைக்கவும், நரித்தலை வாதம் (கவுட்) என்னும் நோயின் வீக்கத்தையும் வலியையும் குறைக்கவும் பயன் தருகிறது. இலந்தையின் இலை மற்றும் துளிர்களும் பசையாக்கி மேல்பூச உதவுகிறது.

இதனால் கட்டிகள், கொப்புளங்கள், வேர் ஊன்றிய கட்டிகள் ஆகியன குணமாகும். சுமார் 100 கிராம் இலந்தைப் பழத்தில் சக்தி (எனர்ஜி) 5.92 கலோரி, மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) 17 கிராம், சர்க்கரை சத்து 10.5 கிராம், உணவாகும் நார்ச்சத்து 0.60 கிராம், கொழுப்புச் சத்து 0.07 கிராம், புரதச் சத்து 0.8 கிராம், விட்டமின் சத்துக்களான பி1 0.022 மி.கி., ரிபோ ப்ளேவின் பி2 0.029 மி.கி., நியாசின் என்னும் பி3 0.78 மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) 25.6 மி.கி., இரும்புச் சத்து 1.1 மி.கி., பாஸ்பரஸ் 26.8 மி.கி. மற்றும் நீர்ச்சத்து 83.0 கிராம் ஆகியவை உண்டு. மேலும் விட்டமின் ‘ஏ’ சத்து 11.12 ஐ.யு., விட்டமின் ‘சி’ சத்து 19.3 மி.கி., மெக்னீசியம் 3 மி.கி., பொட்டாசியம் 70 மி.கி., உப்புச்சத்து (சோடியம்) 1 மி.கி. அளவும் அடங்கியுள்ளன.

இலந்தை மருந்தாகும் விதம் :

* இலந்தை மரப்பட்டை அல்லது வேரைப் பொடித்து சலித்து ஆறாத பழைய புண்கள், புரையோடிப் பல கண்கள் வைத்துத் துன்பம் தரும் சிலந்திப் புண்கள் ஆகியவற்றின் மேல் தூவி வர விரைவில் குணமாகும்.

* இலந்தையின் இலையை மைய அரைத்து நீர்ச்சுருக்கு ஏற்பட்டபோது அடி வயிற்றில் பற்றாகப் போட்டு வைக்க உடனடியாக துன்பம் தொலைந்து சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* இலந்தையின் விதையைப் பொடித்துத் தீநீராக்கிக் குடிப்பதால் தொண்டைப் புகைச்சல், இருமல் ஆகியன விரைவில் குணமாகும்.

* இலந்தையின் இலையைப் பிடி அளவு எடுத்து பாலில் இட்டு கொதிக்க வைத்துத் தேனீர் போலக் குடிப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும்.

* இலந்தை மரத்தின் கட்டையை அடுப்பிலிட்டு எரிக்க மறுபக்கத்தில் கட்டையினின்று எண்ணை வடியும். அதை எடுத்து வெண்புள்ளிகளின் மேல் தடவி வருவதால் தோலின் நிறம் மாறும்.

* இலந்தையின் கொட்டையை நீக்கி சதைப் பகுதியை எடுத்து அதனோடு சுவைக்கேற்ப மிளகாய் வற்றலும், உப்பும் சேர்த்து அரைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு ஒரு கடுக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து வர உடலில் ஏற்பட்ட அழலைத் தணிப்பதோடு செரியாமை என்னும் அசீரணத்தையும் போக்கும்.

* இலந்தை மரப்பட்டை மற்றும் இலையைச் சேர்த்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து உடலுக்குக் குளிப்பதால் உடல் வலி தணியும். இலந்தை இவ்வளவு மருத்துவ குணங்களைப் பெற்று விளங்குகிறது என்று இன்று அறிந்து கொண்டும் ஆரோக்கியமான வாழ்வுக்கு இலந்தையும் ஒன்று என்பதைப் பதிவு செய்து பயன்படுத்த முனைவோம்.