Author Topic: ~ மசால் தோசை ~  (Read 334 times)

Online MysteRy

~ மசால் தோசை ~
« on: February 13, 2016, 08:45:49 PM »
மசால் தோசை



தேவையானவை :

புழுங்கல் அரிசி- இரண்டு கப்
உளுத்தம் பருப்பு- அரை கப்
கடலைப்பருப்பு- இரண்டு டேபிள் ஸ்பூன்
வெந்தயம்- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு- சிறிது
மசாலா செய்வதற்கு :
உருளைக்கிழங்கு – இரண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – 1
கடுகு,உளுந்து – கால் டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
2.பின்னர் வேகவைத்த உருளைகிழங்கை நறுக்கி சேர்க்கவும் ,சிறிது உப்பு ,சாம்பார் பொடி சேர்த்து பிரட்டவும்.இப்பொழுது மசாலா ரெடி .
3.மேற்கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாக குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைத்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
4.அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்கவிடவும்.
5.பின்பு தோசைக் கல்லில் மெல்லியதாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி மொறு மொறுப்பாக வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
6.தோசையினுள் தயாராய் செய்து வைத்துள்ள உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்சுவையான மசால் தோசை தயார்.